Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

யாழ்ப்பாணம்-Jaffna

 

 

 

யாழ்ப்பாணம்  à®Žà®©à¯à®ªà®¤à¯ இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் யாழ்நகரில், இந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

 


யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.

 

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.

 

1935ல் உருவான யாழ்பாண நூலகம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக விளங்கியது. 1981ல் நாசவேலையால் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் நாசமாகியது

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
    சாவகச்சேரி  
அச்சுவேலி கப்பூது சிங்கைநகர் பருத்தித்துறை
அராலி கம்பர்மலை சிந்துபுரம் பலாலி
அரியாலை கரணவாய் சில்லாலை பாலாவி
அல்லாரை கரந்தன் சுண்டிக்குளி புலோலி
அல்வாய் கரம்பொன் சுதுமலை புளியங்கூடல்
அளவெட்டி கரவெட்டி சுழிபுரம் புன்னாலைக்கட்டுவன்
அனலைதீவு கல்வியங்காடு சுன்னாகம் மட்டுவில்
ஆத்தியடி களபூமி தாவடி மண்டைதீவு
ஆவரங்கால் காங்கேசன்துறை திருநெல்வேலி மயிலிட்டி
ஆனைக்கோட்டை காரைநகர் துன்னாலை மருதனார்மடம் சந்தி
இடைக்காடு  கீரிமலை தெல்லிப்பழை மல்லாகம்
இணுவில் குப்பிளான் தொல்புரம் மறவன்புலவு
இருபாலை குரும்பசிட்டி தொண்டைமானாறு மாதகல்
இலக்கணாவத்தை கெருடாவில் நயினாதீவு மாவலித்துறை
இளவாலை கைதடி நல்லூர்  மாவிட்டபுரம்
ஈச்சங்காடு கொக்குவில் நவாலி மானிப்பாய்
உடுப்பிட்டி கொடிகாமம் நாகர்கோயில் மிருசுவில்
உடுவில் கொம்மந்தறை நாயன்மார்கட்டு மீசாலை
உரும்பிராய் கொல்லன்கலட்டி நாவற்குழி மூளாய்
ஊரெழு கொழும்புத்துறை நாவாந்துறை வடமராட்சி
எழுவைதீவு கோண்டாவில் நீராவியடி வட்டுக்கோட்டை
ஏழாலை கோப்பாய் நீர்வேலி வண்ணார்பண்ணை
கச்சாய் சங்கானை நுணாவில் வரணி
கட்டுவன் சங்குவேலி நெல்லியடி வல்லிபுரம்
கந்தரோடை சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு வல்வெட்டித்துறை
கந்தர்மடம் சங்கரத்தை பண்ணாகம் வியாபாரிமூலை
Writers

Popular Products

Top Links