Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

குப்பிளான்-kuppilan

      

 

குப்பிழான் என்ற பெயர் எப்படி உருவானது

 

யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப் பக்கமாகச் சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் குடாநாட்டின் பிரதான வீதிகளான பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் (வடக்கு) சந்தியினையும், காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் சந்தியினையும் இணைக்கும் வீதியில் (மத்திய ரேகை போன்று கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் வீதி) கடும் சிவப்பு நிறமான செம்மண் வளம் கொழிக்கும் சிறு கிராமமே குப்பிழான் என்னும் சிற்றூர் ஆகும். மானிப்பாய் தொகுதியில் சுமார் இரண்டு சதுர மைல்களை பரப்பளவாகக் கொண்ட இக்கிராமத்திற்கு குப்பிழான் என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் 1964 ம் ஆண்டு ஏழாலைக்கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து தனிக்கிராமமாக உருவாக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட கிராமோதய மலர் சஞ்சிகையில் குப்பிழாய் என்னும் ஒரு புல் பூண்டு இந்த மண்ணில் அதிகமாகக் காணப்பட்டதன் காரணமாகவே குப்பிழான் என்னும் பெயர் உருவாகியது என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

கிராமத்தின் புவியியல் நிலைமையினை ஆய்வு செய்து பார்த்தால் வடக்கே குரும்பசிட்டி தெற்கே மைலங்காடு மேற்கே ஏழாலை கிழக்கே புன்னாலைக்கட்டுவன் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. இப்புவியியல் நிலத்தின் அரைவாசி நிலம் பயிர்ச்செய்கை நிலமாகவே முன்னைய காலங்களில் இருந்து வந்தது. கிராமத்தின் மையமாக உள்ள குப்பிழான் சந்தியிலிருந்து தெற்குப்பக்கமாக உள்ள நிலப்பரப்பில் அதாவது தெற்கு எல்லைக்கிராமமான மைலங்காடுவரை உள்ள புவிப்பரப்பில் எண்பது வீதமானவை பயிர்ச்செய்கை நிலங்களாகும்.

 

1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வரலாறு

 

குப்பிழான் கிராமம்

 

Writers

Popular Products

Top Links