Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

குரும்பசிட்டி-kurumbasiddy

 

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே பலாலி விமானத்தளமும், கிழக்கே வயாவிளான், தென்கிழக்கே புன்னாலைக்கட்டுவன், தெற்கே குப்பிளான், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. இப்பகுதி தொன்றுதொட்டு மயிலிட்டி தெற்கு என வழங்கப்பட்டது.

 

இக் கிராமம் 1987 இல் சுமார் 730 குடும்பங்களை கொண்டிருந்தது. கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில் செய்வோர், கைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தம் கடின ௨ழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வந்தது. 

 

 à®µà®¿à®¨à®¾à®¯à®•ர் ஆலயம் சார்ந்த ஒரு சிறு காணி குரும்பசிட்டி எனப் பெயர் பெற்றிருந்தது.  இங்கு குறும்பர் என்று ஒரு இனத்தவர் பாளையம் அமைத்து வாழ்தனர் என்றும் . அதனாலே இப்பெயர் வந்தது என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு, குறும்பயிட்டி, குரும்பசிட்டி என்று இப்பெயர் மருவிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.  இன்று குரும்பசிட்டியிலுள்ள ஏனைய குறிச்சிப் பெயர்கள் வவுணத்தம்பை, வளப்புலம், மயிலங்கலட்டி, மாயெளு பயிற்றிக்கலட்டி,சத்தியகலட்டி, தேவசூரி, கொக்கன், வள்ளுவன்காடு, பரத்தைப்புலம், வேளான்புலம், இடையாம்புலம் போன்றனவாகும்

 

செம்மண்னின் செழுமையும் கிணற்று நீரும் இங்கு விவசாயக்குடியிருப்புகள் தோன்றக்காரணமாயின. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரையும் ஏன் அதற்கு பின்பும் விவசாயமே முக்கியதொழிலாக விளங்கிவந்தது. இவ் விவசாயிகளுக்கு 19ம் நூற்றாண்டு வரை கல்வியறிவு கிட்டவில்லை என்று தெரிகிறது. குன்றும் குழிகளும் நிரம்பிய கல் ஒழுங்கைகளும் பற்றைக்காடுகளும் மண்குடிசைகளும் கொண்ட ஒரு பின்தங்கிய கிராமமாக எமது ஊர் à®µà®¿à®³à®™à¯à®•ிவந்தது.  சமூக அமைப்பை நோக்கின் காணிகளினதும், விவசாய நிலங்களினதும் உடைமையாளர்களாக உயர் வகுப்பினர் விளங்க, அவர்களது குடிமக்களாக, நிலபுலமற்ற, அடிப்படை வாழ்க்கை வசதிகளற்ற நாளாந்தக் கூலிகளாகச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வந்தனர்.

 

யாழ்ப்பாண அரசுக்காலத்திலிருந்து கிராமிய மட்டத்தில் நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள உடையார், முதலியார் போன்ற பதவிகள் இருந்து வந்தன போத்துக்கேயர்,  ஒல்லாந்தர்கள் இக்கிராமிய நிர்வாக அமைப்பை ஏற்றுச் சுதேசமொழிகளின் மூலம் நிர்வாகம் நடத்தினர். இன்நிர்வாகப்பரைம்பரைகள் தொடர்ந்தன. 1833ல் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபோதும் உடையார், முதலியார் பரம்பரையினர் காணப்பட்டனர். சமூகத்தில் மேற்தட்டு வர்க்கத்தினராக வாழ்ந்த இவர்களது குடும்ப உறவுகள் பெரும்பாலும் ஏனைய கிராமங்களில் உள்ள இவ்வர்க்கங்களுடனேயே இருந்துள்ளன எனலாம். இறுக்கமான வர்ணப்பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவாம்

 

http://www.kurumbasiddyweb.com

Writers

Popular Products

Top Links